Thursday, January 10, 2008

"பொங்கலோ பொங்கல்"

புது "இயர்" பொறந்தாச்சு.

கொண்டாட்டமும், கும்மாளமும் அடங்கியாச்சு.

பொங்கல் வந்தாச்சு!

நாங்கல்லாம் பொங்கலுக்கு
வீட்டை சுத்தம் செய்து, வெள்ளையடிச்சு,
பழசையெல்லாம் தூக்கி எரிஞ்சுட்டு,
கோலமெல்லாம் போட்டு,
புதுப்பானையில் பொங்கல் வச்சு,
பொங்கி வரும்போது "பொங்கலோ பொங்கல்" கூவி,
சூரியனை வணங்கி நன்றி சொல்லி,
அக்கம், பக்கம், ஊரு, ஒறவுக்கெல்லாம் வாழ்த்து சொல்லி,
ரெண்டு வித பொங்கல் சமைச்சு, கூட்டு,
பொரியல், அப்பளத்துடன் தல வாழ எல போட்டு
விருந்தாளிகளுக்கு உபசரிச்சுட்டு அப்புறம்
கூடி குலாவி சாப்பிடுவோம் !!
சவேரா போகத் தெரிஞ்ச மக்களே - இந்த
வகையறா பண்டிகை தெரியுமா ???


இப்படிக்கு,
கொஞ்ச நஞ்ச தமிழன்